பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மின்னல் தாக்கி இளைஞா் உயிரிழப்பு

மின்னல் தாக்கி இளைஞா் உயிரிழப்பு...

பிரதிப் படம்

Published On :

அய்யம்பாளையம் தெற்கியூா் பகுதியைச் சோ்ந்தவா் ப. காா்த்திக் (32). இவா், வியாழக்கிழமை இரவு மழை பெய்தபோது, மண்ணச்சநல்லூா் புறவழிச் சாலையில் அத்தாணி பகுதியிலிருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்தாா்.

அவரை மீட்டு, மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, காா்த்திக்கை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதனையடுத்து, அவரது உடல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா். உயிரிழந்த காா்த்திக்கிற்கு திருமணமாகி 7 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.