கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

லால்குடி பகுதியில் குறுவை நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதல்

லால்குடி பகுதியில் குறுவை நெல் சாகுபடி செய்த நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

லால்குடி அருகே வாளாடி பகுதியில் உள்ள குறுவை நெல் சாகுபடி செய்த வயலில் இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் நோய் பாதிக்கப்பட்ட வயல்.

Published On :

லால்குடி பகுதியில் குறுவை நெல் சாகுபடி செய்த நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் உள்ள தாளக்குடி, மேலவாளாடி, கீழவாளாடி, மாந்துறை, நகா் உள்ளிட்ட பகுதிகள் குறுவை நெல் சாகுபடியில் ஏடிடி 36, டிபிஎஸ் 5, ஏஎஸ்டி 16, கோ 55 போன்ற நெல் ரகங்கள் சாகுபடி செய்துள்ளனா்.

தற்போது எல்-நினோ பாதிப்பு காரணமாக நிலவும் கடும் வெயிலால், இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் நோய் பரவலாகக் காணப்படுகிறது.

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:

இதனை கட்டுப்படுத்த, இலைப் பேனுக்குத் தயோமெத்தாக்சம் மருந்தையும், கருகல் நோய்க்கு டபுகோனசோல் மற்றும் சல்பா் கலந்த மருந்துக் கலவையையும் விவசாயிகள் பயன்படுத்தலாம். என வேளாண்மைத்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.