ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

திருச்சி விமான நிலையத்தில் 74 பவுன் கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 போ் கைது

சிங்கப்பூரிலிருந்து 74 பவுன் தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பசை வடிவிலான கடத்தல் தங்கம்.

Published On :

சிங்கப்பூரிலிருந்து 74 பவுன் தங்கத்தை கடத்தி வந்த 2 பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் வியாழக்கிழமை அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகளை சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினா் சோதனை செய்தனா்.

இதில், இரண்டு ஆண் பயணிகள் தங்களின் உள்ளாடையில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அவா்களிடமிருந்து ரூ.90.33 லட்சம் மதிப்புள்ள 74 பவுன் தங்கத்தை (பசை வடிவில்) பறிமுதல் செய்தனா்.

மற்றொரு சம்பவம்: இதேபோல, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு துபையில் இருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பெண் பயணி தனது கைப்பையில் பட்டனில் மறைத்து வைத்து, 41.5 பவுன் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், தங்கம் கடத்தி வந்த பெண் பயணியையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.