/

சிக்குன்குனியா, டெங்கு நோய் தடுப்பு பயிற்சி முகாம்

வந்தவாசி, ஜன. 8: தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சிக்குன்குனியா, டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.  இதில் மகளிர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

வந்தவாசி, ஜன. 8: தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சிக்குன்குனியா, டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.

 இதில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் பயிற்சி பெற்றனர். வந்தவாசி நகராட்சி ஆணையர் என்.உசேன்பாரூக்மன்னர் தலைமை வகித்தார். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் மணிவர்மா, வழூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ.வெங்கடேசன் ஆகியோர் நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினர்.  நகராட்சி சமுதாய அமைப்பாளர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் அ.மு.உசேன், த.வேலு, ஜலால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.