திருப்பத்தூரில் ஜன. 12-ல் சமத்துவ பொங்கல் கபடி போட்டி

வேலூர், ஜன. 8: திருப்பத்தூரில் ஜன. 12-ல் சமத்துவ பொங்கல் கபடி போட்டி நடைபெறுகிறது.   இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ. மதிமாறன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆண
Updated on
1 min read

வேலூர், ஜன. 8: திருப்பத்தூரில் ஜன. 12-ல் சமத்துவ பொங்கல் கபடி போட்டி நடைபெறுகிறது.

  இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ. மதிமாறன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், வேலூர் மாவட்ட அளவிலான சமத்துவப் பொங்கல் கபடி போட்டி புதன்கிழமை (ஜன. 12) காலை 9 மணிக்கு திருப்பத்தூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

 இரு பாலருக்கும் தனித் தனியாக நடைபெறும் இப்போட்டியில், மாணவர் மற்றும் பொதுமக்கள் அணிகள் பங்கேற்கலாம்.

  வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 1200, 2-ம் பரிசாக ரூ. 900, 3-ம் பரிசாக ரூ. 600 வழங்கப்படும்.

விருப்பமுள்ள அணிகள் புதன்கிழமை காலை 8 மணிக்குள் கல்லூரிக்கு நேரிடையாக வந்து பதிவுசெய்யலாம். காலதாமதமாக வரும் அணிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டாது. மாவட்ட போட்டிகளுக்கு பயணப் படி, தினப் படி வழங்கப்படாது.

 தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இம்மாத இறுதியில் கோவையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேலூர் மாவட்டம் சார்பில் அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார் மதிமாறன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com