கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

வேலூர், ஜன. 8: நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆட்சியர் செ.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:   வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மைக்ரோ பைனான்ஸ் (நுண்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

வேலூர், ஜன. 8: நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆட்சியர் செ.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மைக்ரோ பைனான்ஸ் (நுண்கடன் நிறுவனங்கள்) எனும் நிதி அமைப்பினர் தாமாகவே முன்வந்து பொதுமக்களை வற்புறுத்தி, வட்டிக்கு கடன் வழங்கிவருகின்றனர்.  

கடன் தவணை செலுத்த தவறியவர்களை துன்புறுத்தல், அச்சுறுத்துதல், வாங்கிய கடனை திரும்ப செலுத்த மேலும் அதிக வட்டிக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட செயல்களால் கடன் செலுத்த இயலாத அப்பாவி மக்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

 கடன் பெற்றவர்கள் வட்டி கட்டவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் அவர்களை மிரட்டுவதால் அவர்கள் அந்த கடனை செலுத்தமுடியாமல் மீளாத் துயரத்துக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகிறார்கள்.

 இதுபோன்ற நபர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாமாகவே முன்வந்து வற்புறுத்தி கடன்கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்கள் மீது தகவல் தெரிவித்தால் அரசு விதிமுறைப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 தவறு செய்யும் நுண்கடன் நிறுவனங்கள் மீது காவல் நிலையத்திலும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.