மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

செலவால் திணறும் வேட்பாளர்கள்; உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

வேலூர், அக். 8: உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் செலவு அதிகரிப்பால் திணறி வருகின்றனர். இருப்பினும், அவர்களுடன் செல்லும் ஆதரவாளர

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

வேலூர், அக். 8: உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் செலவு அதிகரிப்பால் திணறி வருகின்றனர். இருப்பினும், அவர்களுடன் செல்லும் ஆதரவாளர்கள் உற்சாகத்துடனே உள்ளனர்.

 வேட்புமனு தாக்கல் செய்து, அவற்றின் பரிசீலனை முடிவதற்குள்ளாகவே கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்தல் பணிகளை தொடங்கினர். முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரிய பின்னர், ஆலோசனைக் கூட்டம், அறிமுகக் கூட்டம் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை அனுசரித்து செல்லும் நிகழ்வுகள் முடிந்து இப்போதுதான் முழுமையான பிரசாரத்தை வேட்பாளர்கள் தொடங்கியுள்ளனர்.

 தேர்தலில் போட்டியிட முயற்சி மேற்கொண்டவர்கள் பலரும், வேட்பாளராகவே நிதியளிப்பு செய்யும் கட்டாயத்தில் இருந்தனர். வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டால் போதும் என்ற ஆர்வத்தில் போட்டிப் போட்டு, அதில் வெற்றி கண்டவர்கள் இன்னொரு வெற்றிக்காக இப்போது களத்தில் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 சொந்தக் கட்சிக்குள்ளேயே கவிழ்க்கும் எதிரிகள், வாக்கு சேகரிப்பின்போது பிரியாணி பொட்டலங்கள், டீ, காபி போன்ற பானங்கள், இரவில் களைப்பு தீர உற்சாகப் பானம், தினப்படி என நாள்தோறும் சராசரியாக ரூ.15 ஆயிரம் செலவிட வேண்டியுள்ளதாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வேட்பாளர்கள்

 கூறுகின்றனர்.

 நகர்புறங்களில் பிரசார ஆட்டோக்கள், துண்டுப் பிரசுரங்கள், கொடி பிடிக்க ஆள் ஆகியவற்றுடன் முடிந்து விடுகிறது. ஆனால் கிராமப்புறங்களிலோ நீண்ட தொலைவு நடந்து செல்லும் நிலையும், வாகனங்களில் சென்று பிரசாரம் செய்யும் நிலையில் உள்ளது.

 அத்துடன் கிராமப்புறங்களில் சுவர் விளம்பரங்களிலும் வேட்பாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் வேட்பாளர்களை கண்டு அச்சமடைந்த மக்கள், இப்போது துணிச்சலாக என் வீட்டில் சுவர் விளம்பரம் செய்வதற்கு இவ்வளவு பணம் கொடு என உரிமை கொண்டாடவும் தொடங்கியுள்ளனர் என நெமிலியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர் கூறினார்.

 தேர்தல் செலவை கண்காணிக்க பெரிய அளவில் எந்த தடுப்பு நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதால் வேட்பாளர்களுக்கு வரம்பு மீறிய செலவு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

 வாக்காளர்களுக்கு என்ன?

 கர்ப்புறங்களில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஒரு சில வேட்பாளர்கள் தாங்கள் கட்சிப் பதவிகள் மற்றும் வேறு பொறுப்புகளில் இருந்தபோது சேர்த்து வைத்த சால்வைகளை வீடுவீடாகச் சென்று குடும்பத் தலைவருக்கு அணிவித்து வாக்கு கேட்கும் கவர்ச்சி திட்டத்தையும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

 வேலூர் நகரில் ஒரு வேட்பாளர், வீட்டுக்கு ஒரு டர்க்கி டவல் அளித்து வாக்கு சேகரித்தாகவும் வாக்காளர் தரப்பில் பேசிக் கொண்டனர்.

 வாக்குறுதிகள் மட்டுமின்றி, கடைசி நேரத்தில் தீபாவளி கவர்ச்சி பரிசுகளும் வீடுகளை நோக்கி வரும் என்பதை இப்போதே வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வேலையிலும் ஒரு சில கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.