மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

செங்கம், புதுப்பாளையம் பகுதிகளுக்கு இன்டேன் காஸ் ஏஜென்ஸி நியமிக்கப்படுமா?

செங்கம், ஜன. 10: செங்கம், புதுப்பாளையம் பகுதி காஸ் நுகர்வோர்களுக்கென தனி இன்டேன் காஸ் ஏஜென்ஸியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  செங்கம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் சுமார் 5000-

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:34 pm

ஏ. சரவணன்

செங்கம், ஜன. 10: செங்கம், புதுப்பாளையம் பகுதி காஸ் நுகர்வோர்களுக்கென தனி இன்டேன் காஸ் ஏஜென்ஸியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 செங்கம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட இன்டேன் காஸ் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களுக்கு தற்போது போளூரில் உள்ள ஒரு ஏஜென்ஸி தான் சப்-டீலர் மூலம் காஸ் சிலிண்டர்களை விநியோகித்து வருகிறது.

செங்கத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தூரமுள்ளது போளூர். அங்குள்ள காஸ் ஏஜென்ஸியினர் சிலிண்டர்களை மினிவேனில் ஏற்றி வந்து விநியோகித்துவிட்டுச் செல்கின்றனர்.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர், தேவிகாபுரம், மண்டகொளத்தூர், கண்ணமங்கலம், கடலாடி, செங்கம், புதுப்பாளையம், சேத்துப்பட்டு பகுதிகளுக்கு அந்த ஒரு ஏஜென்ஸி மட்டுமே காஸ் விநியோகம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் சிலிண்டர்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. பதிவு செய்து 40 நாள் முதல் 60 நாள்களுக்குப் பிறகுதான் சிலிண்டர் கிடைக்கிறதாம்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்படும் அந்த சிலிண்டர்களைப் பெற முட்டி மோத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 இதனால் பாதிக்கப்படும் காஸ் நுகர்வோர், காஸ் கொண்டு வரும் லாரிகளை சிறை பிடிப்பது, சாலை மறியல் செய்வது போன்ற நிகழ்வுகள் தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் போளூரில் உள்ள இன்டேன் இணைப்பை ரத்து செய்துவிட்டு செங்கத்தில் இயங்கி வரும் எச்.பி. காஸ் ஏஜென்ஸிக்கு மாறிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இணைப்பை ரத்து செய்ய வேண்டுமானால் சிலிண்டர்கள், ரெகுலேட்டர், காஸ் இணைப்பு வாங்கியபோது வழங்கப்பட்ட ரசீது ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டுமாம். இணைப்பு வழங்கி 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் ஆவதால் பலரிடம் ரசீது இல்லை. இதனால் இணைப்பை ரத்து செய்வதில் சிக்கல் நிலவுகிறது.

 மேலும் அனைத்து இன்டேன் காஸ் நுகர்வோரும் எச்.பி.-க்கு மாறினால் அங்கும் எண்ணிக்கை அதிகமாகி காஸ் பெறுவதில் இதே போன்ற தாமதம் ஏற்படுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் நிலவுகிறது.

 எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து செங்கம், புதுப்பாளையம் காஸ் நுகர்வோருக்காக தனி இன்டேன் காஸ் ஏஜென்ஸியை நியமிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.