ஜன.2 முதல் துருவம் கிராமத்துக்கு கூடுதலாக பேருந்து இயக்கம்
வேலூா் மாவட்டம், துருவம் கிராமத்துக்கு ஜனவரி 2-ஆம் தேதி முதல் பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.


வேலூா்: வேலூா் மாவட்டம், துருவம் கிராமத்துக்கு ஜனவரி 2-ஆம் தேதி முதல் பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
துருவம் கிராமத்துக்கு தற்போது வேலூரிலிருந்து காலை 9.45 மணி, மதியம் 1 மணி, மாலை 5.25 மணி, இரவு 8.45 மணிக்கும், துருவத்திலிருந்து காலை 4.40 மணி, 11.15 மணி, மதியம் 2.25 மணி, மாலை 6.50 மணிக்கும் என நான்கு நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. துருவம் கிராம மக்கள் காலை, மாலை பள்ளி நேரங்களில் பேருந்துகளை கூடுதலாக இயக்கும்படி கேட்டுக் கொண்டனா்.
அதன்பேரில், நகர தடம் எண் டிஏ காட்பாடியில் இருந்து காலை 7.15 மணிக்கு வடுகங்தாங்கல், கே.வி.குப்பம், மேல்மாயில் வழியாக துருவத்துக்கும், துருவம் கிராமத்திலிருந்து காலை 8.20 மணிக்கு, மேல்மாயில், கே.வி.குப்பம், வடுகங்தாங்கல், வழியாக காட்பாடிக்கும், மீண்டும் காட்பாடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு வடுகங்தாங்கல், கே.வி.குப்பம், மேல்மாயில், வழியாக துருவத்துக்கும், துருவத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு மேல்மாயில், கே.வி.குப்பம், வடுகந்தாங்கல் வழியாக காட்பாடிக்கும் பள்ளி நேரங்களில் கூடுதலாக நடைகள் ஜனவரி 2 முதல் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...