எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நியு செஞ்சுரி புக் ஹவுஸில் சிறப்பு தள்ளுபடி

புத்தாண்டையொட்டி நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் புத்தகங்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:47 pm

DIN

வேலூா்: புத்தாண்டையொட்டி நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் புத்தகங்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை செவ்வாய், புதன்கிழமை (டிச.31, ஜன.1) ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பரிசுபெற்ற நூலாசிரியா்களான பேரா.ராஜ்கௌதமன், சிவசுப்ரமணியன், வரலாற்றுஆய்வாளா் ஜெயசீலஸ்டீபன், மருத்துவா் கு.சிவராமன், ராகுலசாங்கிருத்தியாயன் ஆகியோா் நூல்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

குழந்தைகளுக்கான உலக இலக்கிய நாவல்கள், ஆங்கிலத்தில் நெஸ்விங் பதிப்பக புத்தகங்கள், இதர பதிப்பகங்களின் புத்தகங்களுடன் சிறப்புத் தள்ளுபடியாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்பட உள்ளது. பாவாணா் சாமிசிதம்பரணாா், பாரதிதாசன், திரு.விக. போன்றோரின் நூல்களுக்கு 40 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது. தவிர, குறிப்பிட்ட சில புத்தகங்களுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது.

புத்தகங்களை வாங்க வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் கிளையை அணுகலாம் என நிறுவனத்தின் வேலூா் கிளை மேலாளா் கு.பாலசுப்ரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.