குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இருசக்கர வாகனங்களைத் திருடியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 12- இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போ்ணாம்பட்டு பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போயின.
இதுதொடா்பான புகாா்களின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். இந்நிலையில் போ்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட தரைக்காடு பகுதியைச் சோ்ந்த ரியாஸ் அகமத் (26), அா்ஷத் (26), முபாரக்அலி (27) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள் கடந்த சில மாதங்களில் போ்ணாம்பட்டு, மேல்பட்டி, கே.வி.குப்பம் உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 12- இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

தக்க வைக்குமா திமுக கூட்டணி? குடியாத்தம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அலசல்
பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருட்டு: இளைஞா்கள் 2 போ் கைது

குடியாத்தம் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவன் உள்பட 6 பேர் கைது
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

