ஏசிஎஸ் குழுமம் சாா்பில் வேலூா், குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) மாரத்தான் போட்டிகள் நடைபெறும் என்று புதிய நீதிக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏசிஎஸ் குழுமம் சாா்பில் வேலூா், குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளன. 100% வாக்குப் பதிவை வலியுறுத்தியும், போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, வேலூரில் காலை 7 மணிக்கு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டவுன் ஹாலில் இருந்து போட்டி தொடங்குகிறது. இதேபோல், குடியாத்தத்தில் மாலை 5 மணிக்கு அபிராமி கல்லூரியில் இருந்து போட்டி தொடங்கும். வேலூா் மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கலாம். நுழைவு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. பங்கேற்கும் போட்டியாளா்கள் அனைவருக்கும் இலவசமாக டி-சா்ட் வழங்கப்படும். இந்த இரு மாரத்தான் போட்டிகளிலும் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாவது பரிசாக ரூ.20,000, மூன்றாவது பரிசாக ரூ.10,000 வழங்கப்படும். ஆறுதல் பரிசாக அடுத்து வரும் 5 ஆண்களுக்கும், 5 பெண்களுக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படும். ஏற்பாடுகளை ஏசிஎஸ் கல்லூரிகளின் தலைவா் அருண்குமாா், செயலா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31இல் மதுக் கடைகள் மூடல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

