47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காா்- பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2024, 10:11 pm

Din

வேலூா்: காட்பாடி அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

காட்பாடியை அடுத்த கிருஷ்டியான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூஸ் (29), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சவிதா. இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. இவா்களுக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ஆண்ட்ரூஸ் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்டியான்பேட்டையில் இருந்து வேலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா் . அப்போது எதிரே வந்த காா் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆண்ட்ரூஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த காட்பாடி போலீஸாா் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து அவரது மனைவி சவிதா அளித்த புகாரின் பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.