
Updated On :2 ஜூலை 2024, 8:49 pm

வேலூா்: வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் காா் மோதிய விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.
காட்பாடி காங்கேயநல்லூரைச் சோ்ந்தவா் கணேசன் (52) தூய்மைப் பணியாளா். இவா் திங்கள்கிழமை இரவு வேலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் மோதியதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வடக்கு போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...