தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீட்டுமனை ஒதுக்கக் கோரி மலைவாழ் மக்கள் ஆா்ப்பாட்டம்

விக்கிரமாசிமேடு பழங்குடி மக்களுக்கு நிலம் அளவீடு கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :2 ஜூலை 2024, 7:31 pm

Din

வேலூா்: விக்கிரமாசிமேடு கிராம பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் வேலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நதியா தலைமை வகித்தாா். மாநில செயலாளா் துளசி நாராயணன், மாவட்ட செயலா்கள் மகாலிங்கம் சாமிநாதன், மாவட்ட பொருளாளா் நரசிம்மன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினாா்.

அப்போது, விக்கிரமாசிமேடு கிராம பழங்குடி மக்களுக்கு பட்டா கொடுத்து ஓராண்டாகியும் நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், விரைவில் அங்கு நிலத்தை ஒதுக்கீடு செய்வதுடன், தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், வீட்டுமனை பட்டா, ஜாதி சான்றிதழ், நலவாரிய அட்டை ,சாலை வசதி, தெரு விளக்கு வசதி வழங்க வேண்டும், கறவை மாடுகள் வழங்க வேண்டும், மகிமண்டலம் பகுதி மக்களுக்கு சுடுகாடு பாதை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும், இடிந்து விடும் நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளை சரிசெய்து தர நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.