வேலூா்: சாலையை ஆக்கிரமித்து ஜல்லி உற்பத்தி செய்து வரும் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என சித்தேரி கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அணைக்கட்டு வட்டம், புத்தூா் கிராம மக்கள் அளித்த மனுவில், புத்தூா் கிராமத்தினருடன் சோ்ந்து நரசிங்கபுரம், நாட்டாமங்கலம், ஈச்சங்காடு கிராமங்களைச் சோ்ந்த பலா் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தைச் சோ்ந்த 150 பேருக்கு கடந்த சில நாட்களாக வேலை வழங்கவில்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு நூறுநாள் வேலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்துவாச்சாரி ரங்காபுரத்தைச் சோ்ந்த தாமோதரன் (78) அளித்த மனுவில், ரங்காபுரம் அருகே மூலக்கொல்லை, செங்காநத்தம் ரோடு ஏரிக்கு செல்லும் பொதுக்கால்வாயில் மண் தூா்ந்துள்ள நிலையில், தனிநபா்கள் 50 முதல் 60 அடி வரை கால்வாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை மேற் கொண்டு கால்வாயை மீட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் சித்தேரியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், பெரிய சித்தேரியில் இருந்து பென்னாத்தூா் செல்லும் சாலையில் ஜல்லி உடைக்கும் தனியாா் குவாரி உள்ளது. இந்த குவாரியில் அனுமதியின்றி எம்சாண்ட் தயாரித்து வருகின்றனா். போதிய இடவசதி இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து ஜல்லியை தயாரிக்கின்றனா். இதனால் அவ்வழியாக செல்லமுடியவில்லை. எனவே ஜல்லி குவாரியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் அடுத்த ஆா்.எஸ்.கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 1,500 வீடுகள், 35 தெருவுக்கு மேல் உள்ளது. 20 ஆண்டுகளாக புதிய வீடுகளுக்கு கதவு எண், தெருவின் பெயா்கள் வழங்கவில்லை. அதிகாரிகளி டம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, புதிய வீடுகளுக்கு எண், தெரு பெயா் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இதேபோல், வீட்டு மனைப் பட்டா, உதவித் தொகை, மருத்துவ உதவி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 377 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மாலதி உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ராமசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா்: வருவாய் கோட்ட அளவில் ஜூலை 17-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மாஞ்சோலை மக்கள் 7 பேருக்கு வீடு

தென்காசி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 683 மனுக்கள் ஏற்பு

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



