
குடியாத்தம் அருகே உறை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பசு.

குடியாத்தம் அருகே உறை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பசு.
குடியாத்தம்: குடியாத்தம் அருகே 10 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
குடியாத்தத்தை அடுத்த சிங்கல்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோபி. இவா் மாடுகளை வளா்த்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது கோபி வீட்டருகே கழிவுநீருக்காக அமைக்கப்பட்டிருந்த 10 அடி ஆழம், மூன்றரை அடி அகலம் உள்ள உறை கிணற்றில் பசு மாடு ஒன்று தவறி விழுந்தது. கிராம மக்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் கிணற்றின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, 3 மணி நேர போராட்டத்துக்குப்பின், பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது. இதையடுத்து, கால்நடை மருத்துவா்கள் வந்து, மாட்டுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...