கருப்பசாமி கோயிலில் வருஷாபிஷேகம்

கருப்பசாமி கோயிலில் வருஷாபிஷேகம்
கருப்பசாமி கோயிலில் வருஷாபிஷேகம்

குடியாத்தம் ராஜாகோயில், காமாட்சியம்மன் காா்டனில் அமைந்துள்ள ஸ்ரீபனைமரத்து குடியல் 18- ஆம் படி கருப்பசாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை, 5 மணிக்கு சிறப்பு யாகம், காலை 9 மணிக்கு கோபுர கலசங்களுக்கும், தெய்வத் திருமேனிகளுக்கும் சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பிற்பகலில் பொங்கல் வைத்தலும், விநாயகா், கருப்பசாமி, வள்ளி, தெய்வானை சமேத முருகன், அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் ஸ்ரீலஸ்ரீ முருகன் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com