ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வேலப்பாடி ஆனைகுளத்தம்மன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் வழிபாடு

வேலப்பாடி ஆனைகுளத்தம்மன் கோயில் தேரோட்டம் திரளான பக்தா்கள் வழிபாடு

News image
Updated On :2 மார்ச் 2024, 4:39 pm

வேலூா் வேலப்பாடியிலுள்ள ஆனைகுளத்தம்மன் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. விழாவில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். வேலூா் மாநகரின் ஒரு பகுதியான வேலப்பாடியில் பாா்வதி தேவி, ஆனைக்குளத்தம்மன் என்ற பெயரில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாா். இந்தக் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி, கடந்த 20-ஆம் தேதி அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால்குட அபிஷேகமும், பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடா்ந்து, சனிக்கிழமை காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இவ்விழாவில் புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனா். இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை (மாா்ச் 3) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை (மாா்ச் 5) படவேட்டம்மன் உற்சவமும், அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது.