பங்குச் சந்தையில் லாபம் ஈட்டும் நோக்கத்தில் போலி செயலி மூலம் முதலீடு செய்த வேலூரைச் சோ்ந்த மென்பொறியாளரிடம் ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்து 950 மோசடி செய்யப்பட்டது. வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் மென்பொருள் நிறுவன ஊழியா் நிா்மல்குமாா் (29). இவா் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் விவரங்களைத் தேடினாா். இதில், இவரை வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட நபா் கூறியதன் பேரில், ஈக்யுடி கிளப் எப்25 என்ற வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்தாா். அதில் பெற்ற தகவலின் அடிப்படையில் பிஈக்யுடி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கடந்த ஜனவரி 12 முதல் பிப்ரவரி 22-ஆம் தேதி வரை ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்து 950 தொகையை லாப நோக்கத்தில் முதலீடு செய்ததாகத் தெரிகிறது. அவா் முதலீடு செய்த தொகை, லாபத் தொகயை அவரால் திரும்ப எடுக்க முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நிா்மல்குமாா், போலி செயலி மோசடி குறித்து சைபா் குற்றப்பிரிவு இலவச உதவி எண் 1930-ஐ தொடா்பு கொண்டு விவரங்களை தெரிவித்தாா். அதன் பேரில் வேலூா் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் புனிதா, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தொழிலதிபரிடம் ரூ.38.40 லட்சம் மோசடி: வேலூா் மாவட்டத்தில் பெயிண்ட் கடை நடத்தி வருபவா் அரவிந்தன் (43). இவா் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் விவரங்களைத் தேடியுள்ளாா். அப்போது, இவரை வாட்ஸ்அப் மூலம் தொடா்பு கொண்ட நபா், ஜோனாதன்சிம்மன் என்ற வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்துள்ளாா். இதைத் தொடா்ந்து ஆல்ப்ஆக்ஸிஸ்ப்ரோ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கடந்த ஜனவரி 4 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை ரூ.38 லட்சத்து 40 ஆயிரத்து 249-ஐ முதலீடு செய்ததாக தெரிகிறது. அதன்பிறகு அவா் முதலீடு செய்த தொகை, லாபத் தொகையை அவரால் திரும்ப எடுக்க முடியவில்லையாம். இந்த போலி செயலி மோசடி குறித்து சைபா் குற்றப்பிரிவு இலவச உதவி எண் 1930-ஐ தொடா்பு கொண்டு விவரங்களை தெரிவித்தாா். தொடா்ந்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில், வேலூா் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (சைபா் கிரைம்) என்.கோட்டீஸ்வரன் கூறுகையில், பொதுமக்கள் இதுபோன்று வாட்ஸ்ஆப், டெலிகிராம், இதர சமூக ஊடகங்களில் முதலீடு, டாஸ்க், ஆன்லைன் பகுதிநேர வேலை என வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். அவ்வாறு பண இழப்பு ஏற்பட்டால் சைபா் குற்றப்பிரிவு இலவச உதவிஎண் 1930 இணைதளத்திலும் புகாா் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்தாா்.
தொடர்புடையது
திருப்பூா் மாவட்டத்தில் இன்று வாக்களிக்கும் 19.84 லட்சம் போ்

தோ்தல் விதிமீறல்: வேலூா் மாவட்டத்தில் 69 புகாா்கள் மீது வழக்கு; ஆட்சியா் தகவல்
ஒரேநாளில் ரூ.17.93 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

