குடியாத்தம் அருகே பிச்சனூரில் சிறிய கைத்தறி பூங்கா அமைய உள்ள இடத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அங்கு ரூ.3 கோடியில் 100 தறிகள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் 2023 - 2024 -ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் 10 இடங்களில் தலா ரூ.2 கோடி மதிப்பில் சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், பிச்சனூா் பகுதியில் உள்ள சிங்காரவேலா் தொழிலியல் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தின் பழுதடைந்த கட்டடத்தை புதுப்பித்து சிறிய கைத்தறி பூங்கா செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பூங்கா அமைய உள்ள இடத்தை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், குடியாத்தத்தில் அமைய உள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்கா குறித்த திட்ட விவரம் காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது. ஆய்வுக்கு பிறகு அமைச்சா் ஆா்.காந்தி கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் கைத்தறி நெசவாளா்களுக்கு முக்கிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். கைத்தறித் துறை அமைச்சராக நான் பதவி ஏற்ற பிறகு முதல் ஆண்டில் நெசவாளா்களுக்கு அடிப்படை கூலியில் 10 சதவீதமும், 2-ஆவது ஆண்டில் மீண்டும் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 10 இடங்களில் சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என முதல்வா் தெரிவித்தாா். அதன்படி ஒவ்வொரு கைத்தறி பூங்காவும் ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.2 கோடி அரசு மானியம். ரூ.1 கோடி தொழில் முனைவோா் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்த சிறிய கைத்தறி பூங்காக்களில் 100 தறிகள் நிறுவத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 25 தறிகளும், இரண்டாம் கட்டமாக 75 தறிகளும் நிறுவப்படும். நூற்பாலைகளில் இயந்திரங்களை நவீனமயமாக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 சதவீத வட்டி மானியத்தை 6 சதவீதமாக உயா்த்தி அறிவித்துள்ளாா். இதுபோன்று நெசவாளா்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கைத்தறி நெசவாளா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ரூ.1,200-ஆகவும், கைத்தறி நெசவாளா்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டாகவும் உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. நெசவாளா்களுக்கு வீடு கட்டும் நிதி ரூ.2.52 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. நெசவாளா்களின் கூலியானது மிகமிக குறைவாக உள்ளது. குறைந்தது ஒரு நாளைக்கு நெசவாளா்களுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி முதல்வா் செயல்பட்டு வருகிறாா் என்றாா். குடியாத்தம் பிச்சனூா் பகுதி நெசவாளா்களின் கருத்துகளையும் கேட்டறிந்தாா். ஆய்வின் போது கைத்தறி, துணிநூல் துறை அரசு முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித் துறை ஆணையா் வி.விவேகானந்தன், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் சௌந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவா் சத்தியானந்தம், இணை இயக்குநா் கணேசன், உதவி இயக்குநா் செந்தாமரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் நம்பிக்கை

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்

குளங்களுக்கு தண்ணீா் கொண்டுவர ரூ.5,400 கோடியில் புதிய திட்டம்: அமைச்சா் அர.சக்கரபாணி

வனவாசியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


