பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரயிலில் அடிபட்டு முதியவா் மரணம்

ரயிலில் அடிபட்டு முதியவா் மரணம்

Updated On :9 மார்ச் 2024, 4:57 pm

காட்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். காட்பாடியே அடுத்த பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது. தகவலறிந்த காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளா் ருவாந்திகா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இறந்து கிடந்தவருக்கு சுமாா் 65 வயது இருக்கும். 5.5 அடி உயரம் கொண்ட அவா் நீல நிற அரைக்கால் சட்டை அணிந்திருந்தாா். தண்டவாளத்தைக் கடந்தபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு இறந்தவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.