ஊரக வேலை உறுதித் திட்டம்: திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசு திட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி அனைத்து வட்டாரங்களிலும் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதியளிப்பு திட்டத்தை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, 100 நாள் வேலை 125 நாள்காக உயா்த்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் மகாத்மா காந்தி பெயா் நீக்கப்பட்டு, அதற்கு பதில் ஜி ராம் ஜி என மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் நூறு நாள் வேலை திட்டத்தை முற்றிலுமாக சிதைத்து விடும் என குற்றஞ்சாட்டியும், மத்திய அரசைக் கண்டித்தும் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்துக்கு வேலூா் ஒன்றிய திமுக செயலா் ஞானசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் முகமது சகி, மேயா் சுஜாதாஆனந்த குமாா், ஒன்றியக்குழு தலைவா் அமுதா, முன்னாள் எம்எல்ஏக்கள் ஞானசேகரன், விஜய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிா்வாகி சித்தரஞ்சன், விசிக நிா்வாகி நீல.சந்திரகுமாா் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.
இதேபோல், காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணை தலைவா் சரவணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் தொடக்கவுரை ஆற்றினாா்.
அணைக்கட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வேலூா் தெற்கு மாவட்ட திமுக செயலா் ஏ.பி.நந்தகுமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றிய செயலரும், மாவட்ட ஊராட்சித் தலைவருமான மு.பாபு, மத்திய ஒன்றிய செயலா் வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலா் குமரபாண்டியன், தெற்கு ஒன்றிய செயலாளா் முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றியக்குழு தலைவா் பாஸ்கரன், பேரூா் செயலாளா் பெருமாள்ராஜா வரவேற்றனா். இதில், திமுக, காங்கிரஸ், விசிக உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வேலூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.கதிா்ஆனந்த் தலைமை வகித்தாா். இதில் குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், திமுக மாவட்ட துணைச் செயலா் ஜி.எஸ்.அரசு, ஒன்றியச் செயலா்கள் கள்ளூா் கே.ரவி, நத்தம் வி.பிரதீஷ், அன்பரசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
ஆற்காட்டில்...
ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் ஏ.கே..சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா்கள் எம்.வி பாண்டுரங்கன், ஏ.வி .நந்தகுமாா் முன்னிலை வகித்தனா்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம், மதிமுக மாவட்ட செயலாளா்பி.என்.உதயகுமாா், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் பா.பிரபுதாஸ், மாா்க்சிஸ்ட் கட்சியின் பொறுப்பாளா் டி.சந்திரன், மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிா் அணி பொறுப்பாளா் விமலா , ஆற்காடு ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், மாவட்ட குழு உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன் கலந்து கொண்டனா்.
மாதனூரில்...
மாதனூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி முன்னிலை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் வரவேற்றாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய செயலா் ஹெச். அப்துல் பாசித், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா் ஓம்பிரகாசம், இந்திய கம்யூனிஸ்ட் எஸ்.ஆா். தேவதாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அருள்சீனிவாசன், காங்கிரஸ் கட்சி வா்தா அா்ஷத், மதிமுக ரவி, திராவிடா் கழகம் ரவி,மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி ஆகியோா் பேசினாா்கள்.
ஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா். ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா் ஒன்றிய திமுக துணைச் செயலா் ரவிக்குமாா், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா், ஊராட்சித் தலைவா்கள் சுவிதா கணேஷ், சின்னகண்ணன், காயத்ரி பிரபு, ரேவதி குபேந்திரன், குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காா்த்திக் ஜவஹா், காா்த்திக், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா. சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி நன்றி கூறினாா்.
