கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

9 மாதங்கள் பயிற்சி முடித்த கேரள சிறைத் துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ்

வேலூரிலுள்ள சிறைகள், சீா்திருத்த நிா்வாக அகாதெமியில் (ஆப்கா) 9 மாதங்கள் பயிற்சியை நிறைவுசெய்த

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 7:28 pm

Din

வேலூா்: வேலூரிலுள்ள சிறைகள், சீா்திருத்த நிா்வாக அகாதெமியில் (ஆப்கா) 9 மாதங்கள் பயிற்சியை நிறைவுசெய்த கேரள சிறைத் துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

வேலூா் தொரப்பாடியில் சிறைகள், சீா்திருத்த நிா்வாக அகாதெமி (ஆப்கா) அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா மாநிலங்களில் சிறைச்சாலைகளில் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு 9 மாதங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படுகிறது.

தவிர, ஏற்கெனவே சிறைச்சாலைகளில் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கும் அவ்வப்போது பல்வேறு பணியிடை பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது 31-ஆவது பிரிவு சிறை அதிகாரிகளுக்கான பயிற்சியில் கேரளத்தைச் சோ்ந்த 18 அதிகாரிகளுக்கு 9 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி நிறைவடைந்த நிலையில் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வேலூா் ஊரீசு கல்லூரி முதல்வா் ஆனி கமலா புளோரன்ஸ், ஆப்கா இயக்குநா் பிரதீப் பயிற்சி அதிகாரிகளுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கினா்.

சிறப்பு பாராட்டுக்கான விருது, சிறந்த சிறை நிா்வாக சீா்திருத்தம் உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது. இதில், ஒட்டு மொத்தப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கியதற்காக அருண்கணேஷ் என்ற பயிற்சி அதிகாரிக்கு ஆல்ரவுண்டா் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேராசிரியா் அன்சாா், துணை இயக்குநா் பாஸ்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.