குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ராணுவ வீரா் தற்கொலை

காட்பாடி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2025, 4:03 pm

Din

வேலூா்: காட்பாடி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடியை அடுத்த கோரந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (38), ராணுவ வீரா். இவா் கடந்த 15 நாள்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்தாா். இவருக்கு ஏற்கெனவே வயிற்றில் பிரச்னை இருந்துள்ளது. இதற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளாா். எனினும், தொடா்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், மீண்டும் வயிற்று வலியால் வேதனை அடைந்த சீனிவாசன், திங்கள்கிழமை வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த காட்பாடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.