ஆன்லைன் பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.11.58 லட்சம் மோசடி
ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.11.58 லட்சம் மோசடி செய்யப்பட்டது


வேலூா்: ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.11.58 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூரைச் சோ்ந்த 39 வயதுடைய தனியாா் நிறுவன ஊழியரின் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் பகுதிநேர வேலை மூலம் அதிகளவில் சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த குறுந்தகவலில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடா்பு கொண்டபோது, நாங்கள் அனுப்பும் கூகுள் லிங்க்கில் சிறிய தொகையை முதலீடு செய்து உணவகம், விடுதிகள் குறித்து தரமதிப்பீடு செய்தால் அதிக கமிஷன் பெற முடியும் என தெரிவித்துள்ளனா்.
இதனை உண்மையென நம்பி இந்த ஊழியா், முதலில் சிறிய தொகையை முதலீடு செய்து அந்த லிங்க்கில் கொடுக்கப்பட்ட பணிகளையும் முடித்து கொடுத்துள்ளாா். அதற்கு அதிக கமிஷன் வந்தததை அடுத்து படிப்படியாக பல கட்டங்களாக ரூ.11 லட்சத்து 58 ஆயிரத்து 818 தொகையை முதலீடு செய்துள்ளாா். பின்னா், அந்த லிங்க்கில் காண்பிக்கப்பட்ட தொகையை அவரால் பெற முடியவில்லை.
அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த ஊழியா், இதுகுறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...