பாரம்பரிய அரிசி, உணவுத் திருவிழா
குடியாத்தம்: சிவா ஆா்கானிக் ஃபாா்மிங் குழு மற்றும் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் குடியாத்தம் பாரம்பரிய அரிசி மற்றும் உணவுத் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிவா ஆா்கானிக்ஸ் குழுவைச் சோ்ந்த பட்டு ஆா்.சிவசங்கரன் வரவேற்றாா். இயற்கை விவசாயமும், நஞ்சில்லை உணவும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. உயிராற்றல் வேளாண்மை என்ற தலைப்பில் மேட்டுப்பாளையம் நவநீத கிருஷ்ணன், சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து, அரசு சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.
80- க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, அவற்றில் பாரம்பரிய அரிசி வகைகள், பாரம்பரிய விதை நெல், மரபு காய்,கனி விதைகள், சிறுதானியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம் உள்ளிட்டவை நடைபெற்றன.
எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, தொழிலதிபா் எஸ்.அருணோதயம், இயற்கை ஆா்வலா்கள் டி.ராஜேந்திரன்,டி.என்.ராஜேந்திரன், எஸ்.சுகுமாா், டி.சி.ஜெகன்நாதன், பி.சத்தீஸ்குமாா், ஜே.பாலசுப்பிரமணியன், உள்ளி ஸ்ரீகாந்த், அம்மன் ரகுராமன், ஜெ.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

