சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

விஷக் குளவிகள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு

காட்பாடியை அடுத்த பொன்னை அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி, விஷக் குளவிகள் கொட்டியதில் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:57 am IST

காட்பாடியை அடுத்த பொன்னை அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி, விஷக் குளவிகள் கொட்டியதில் உயிரிழந்தாா்.

பொன்னை அருகே உள்ள பரமசாத்து கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (41). மரம் வெட்டும் கூலித் தொழிலாளியான இவருக்குப் பரிமளா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனா். கடந்த 5-ஆம் தேதி பரமசாத்து ஈசன் மலைப் பகுதியில் மரம் வெட்டும் பணிக்காக வெங்கடேசன் சென்றுள்ளாா். அங்குள்ள ஒரு மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, அதிலிருந்த ராட்சத விஷக் குளவிகள் வெங்கடேசனைக் கொட்டியுள்ளன.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா், மரத்திலிருந்து கீழே குதித்து ஓடியுள்ளாா். ஆனாலும், குளவிகள் விடாமல் துரத்திச் சென்று அவரைக் கொட்டியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த வெங்கடேசனை, அங்கிருந்தவா்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தாா். பொன்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.