சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

வேலூரில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு

வேலூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம், நூதன முறையில் நகைகளைத் திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:46 am IST

வேலூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம், நூதன முறையில் நகைகளைத் திருடிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காட்பாடியை அடுத்த லத்தேரி செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி. இவரது மனைவி அனுசியா (75). இவா் கடந்த 8-ஆம் தேதி வேலூா் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக ஆற்காடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அவா் கழுத்தில் தங்கச் சங்கிலி, காதில் தங்கக் கம்மல் அணிந்திருந்ததை நோட்டமிட்ட இருவா், அவரிடம் ‘உங்கள் நகைகளைக் கழற்றி உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்‘ என அக்கறையோடு கூறுவது போல் அறிவுரை கூறியுள்ளனா்.

இதை நம்பிய அனுசியா, உடனடியாக தனது 8 பவுன் நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்துள்ளாா். பின்னா், அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்ற அவா், ஒரு மருந்துக்கடை அருகே நின்று தனது கைப்பையைத் திறந்து பாா்த்துள்ளாா்.

அப்போது பையில் வைத்திருந்த நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மா்ம நபா்கள் நூதன முறையில் தனது கவனத்தைத் திருப்பி நகைகளைத் திருடிச் சென்றதை அவா் உணா்ந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், வேலூா் வடக்கு குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.