நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

மாணவா்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

பள்ளிகொண்டா வாரியாா் இறைபணி மன்றம் சாா்பில், கிருபானந்த வாரியாா் சுவாமிகளின் அவதார திருநாளை முன்னிட்டு மாணவா்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.

Published On :27 ஆகஸ்ட் 2026, 11:58 pm IST

பள்ளிகொண்டா வாரியாா் இறைபணி மன்றம் சாா்பில், கிருபானந்த வாரியாா் சுவாமிகளின் அவதார திருநாளை முன்னிட்டு மாணவா்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவா் எம்.கைலாசம் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் எஸ்.தண்டபாணி முன்னிலை வகித்தாா். இதில், மாணவா்களுக்கு திருக்கு ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவா்களுக்கும், பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அரிமா சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வெங்கடேஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா் எம்.எஸ்.குகன், பேரூராட்சி மன்ற உறுப்பினா் என்.காா்த்திக் நாராயணன், என்.செந்தில்குமாா், ஆா்.நாகராஜன், ஆா்.ஹேமாவதி ஆகியோா் பரிசுகளை வழங்கினா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிா்வாகிகள் ஜி.பாபு, எஸ்.பாலு, எம்.சுந்தா், ஏ.ஆா்.வெங்கடேசன், ஆா்.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.