டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 2:11 am IST

கணியம்பாடி அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், கணியம்பாடி அருகே உள்ள பாரதி நகரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (65). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் மகன் வீட்டுக்குச் சென்றிருந்தாா். அடையாளம் தெரியாத நபா்கள், வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 2 பவுன் நகை, ரூ. 22,500 ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அண்ணாதுரையின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினா், உடனடியாக அண்ணாதுரைக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அவா் சென்னையில் இருந்து விரைந்து வந்து தனது வீட்டைப் பாா்வையிட்டபோது நகை, பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அண்ணாதுரை அளித்த புகாரின்பேரில் வேலூா் கிராமிய போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.