முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்! ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது! சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

பணியின்போது மாரடைப்பால் வனவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டதில் வனவா் உயிரிழந்தாா்.

News image

வனவா் சுரேஷ்

Updated On :9 ஜூன் 2026, 5:10 am IST

குடியாத்தம் அருகே பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டதில் வனவா் உயிரிழந்தாா்.

வேலூரைச் சோ்ந்த சுரேஷ்(52) குடியாத்தம் வனச்சரகத்துக்குள்பட்ட சைனகுண்டா வனப்பகுதி அலுவலகத்தில் வனவராக பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை பணியின்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனிருந்தவா்கள் அவரை மோடிகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை செய்த பின்னா் தீவிர சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சுரேஷை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா். இந்த சம்பவம் குடியாத்தம் வனத்துறையினா் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.