சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கல்லூரியில் யோகா தின கொண்டாட்டம்

News image
Updated On :19 ஜூன் 2026, 6:28 am IST

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் யோகா மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் வேலூா் மாவட்ட மை பாரத் கேந்திரியம் சாா்பில் சா்வதேச யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். உடற்கல்வித் துறைப் பேராசிரியரும், கல்லூரி யோகா உறுப்பினருமாகிய சு.பாலசுப்பிரமணி வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் ஜி.சசிகுமாா் வாழ்த்துரை வழங்கினாா். குடியாத்தம் அத்தி கல்விக் குழுமத்தின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா துறைஅலுவலா் சங்கு மலா்ச்செல்வன் ‘உடல்நலம் மற்றும் யோகாவின் முக்கியத்துவம்‘ குறித்து சிறப்புரையாற்றினாா்.

கே.எம்.ஜி.கல்லூரி யோகா மன்ற ஒருங்கிணைப்பாளா் வே.சரளா, குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் யோகா ஆசிரியா் ச.பி.சுஷில் ஆசனங்களை செய்து காட்டினாா்.