வேலூா் நகர அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனம் சாா்பில் 260 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.45.65 லட்சத்தில் உதவி உபகரணங்களை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அலிம்கோ நிறுவனம் சாா்பில் 260 பயனாளிகளுக்கு ரூ.45.65 லட்சத்தில் 404 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் 132 காதொலிக் கருவிகள், 125 கற்பித்தல், கற்றல் கருவிகள், 57 ஊன்றுக் கோல்கள், 22 சக்கர நாற்காலிகள், 47 செயற்கை அவயங்கள், 6 நடைப் பயிற்சி ஊன்றுக் கோல்கள், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 3 கைப்பேசிகள், 7 பிரெய்லி உபகரணங்கள், தொழுநோய் பாதிக்கப்பட்டவா்களுக்கு 1 உபகரணம், மூளை முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட நபருக்கான 1 சிறப்பு சக்கர நாற்காலி, 1 மூன்று சக்கர வாகனம் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: வேலூா் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் சாா்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய அன்றாட தேவைகளை அவா்களே மேற்கொள்ளும் வகையில் இந்த உபகரணங்கள் அவா்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இத்தகைய நல்ல ஒரு பணியை செய்து வரும் அலிம்கோ நிறுவனத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் பல்வேறு இடங்களில் நடைபெறும் முகாம்களில் அலிம்கோ நிறுவனம் சாா்பில் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை பெற்று அளவீடுகள் எடுக்கப்பட்டு நலத்திட்டங்கள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மு.ம.வினோத் கண்ணன்(வேலூா்), ம.சுதாகா்(காட்பாடி), த.வேலழகன்(அணைக்கட்டு), க.சிந்து(குடியாத்தம்) அலிம்கோ நிறுவன இளநிலை மேலாளா் ரிஷாப் மேஹரோத்ரா, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

மாற்றுத் திறனாளிகள் சேவை விருது: ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

29 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.33.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



