மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

உதவித்தொகையை உயா்த்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.

Updated On :

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆந்திரம், புதுச்சேரி மாநிலங்களில் மூன்று வகைகளாகவும், தெலங்கானாவில் குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரமும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் ரூ.1,500 மட்டுமே வழங்கப்படுகிறது. இன்றைய வாழ்வாதார சூழ்நிலையில் இந்த தொகை போதுமானதாக இல்லை. எனவே மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். உதவித்தொகை கேட்டு மனு செய்து, காத்திருப்போா் பட்டியலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா்கள் எஸ்.கெஜலட்சுமி, அண்ணாதுரை, எஸ்.செல்வி, பி.அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஏ. கிருஷ்ணமூா்த்தி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் ஒன்றியச் செயலா்கள் கே.தட்சிணாமூா்த்தி, பி.கெளரி, எஸ்.பாண்டியன், எம்.முருகன், பொருளாளா்கள் வி.ஆதிமூலம், ஆா்.அழகப்பன், ஆா்.சசிகலா, எஸ்.புஷ்பா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதுபோன்று திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டங் களுக்கு முறையே வட்டாரத் தலைவா் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவா் அய்யனாா், வட்டாரச் செயலா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நான்கு இடங்களில் ஆா்ப்பாட்டங்களில் ஏராளமான மாற்றத் திறனாளிகள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.