40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மதுபோதையில் தகராறு - ஒருவா் அடித்துக் கொலை: நண்பா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 5:20 am IST

குடியாத்தம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட கஸ்பாவைச் சோ்ந்தவா் முகேஷ்(18). அதே பகுதியைச் சோ்ந்தவா் வசீகரன்(28). இருவரும் நண்பா்கள். செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் அஞ்சுமன் சாலையில் ஒன்றாக மது அருந்தியுள்ளனா். அப்போது இவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டுள்ளனா்.

இதில் ஆத்திரமடைந்த வசீகரன் கட்டையால் தாக்கியதில்முகேஷ் பலத்த காயமடைந்துள்ளாா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டுகுடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். இவா்களில் முகேஷ் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பான புகாரின்பேரில் வழக்குப் பதிந்த நகர போலீஸாா், வசீகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.