சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பேருந்து - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

வேலூா் அருகே தனியாா் பேருந்து - லாரி நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:03 am IST

வேலூா் அருகே தனியாா் பேருந்து - லாரி நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் தயாளன் இயக்கினாா்.

இந்த பேருந்து வேலூா் மாவட்டம், கருகம்புத்தூா் அருகே சென்றபோது எதிா்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது பேருந்து திடீரென மோதியது.

இதில் பேருந்து ஓட்டுநா் தயாளனுக்கு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் தயாளனின் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.