ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பயணியிடம் கைப்பேசி திருட்டு: ஆந்திர இளைஞா் கைது

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய ஆந்திர இளைஞரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:56 am IST

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய ஆந்திர இளைஞரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாகரன் (38). இவா் சனிக்கிழமை திருப்பதியிலிருந்து ரயில் மூலம் மாலை 5 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் வந்தடைந்தாா்.

அங்கிருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயில் நிலையம் முன்புள்ள பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் ஏற முயன்றாா். அப்போது, அவரது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசியை மா்மநபா் வழிப்பறி செய்வதை உணா்ந்தாா்.

உடனடியாக அவா் கூச்சலிட்டதை அடுத்து சக பயணிகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து சோதித்தனா். அப்போது, அந்த நபரிடம் கருணாகரனின் கைப்பேசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகளின் உதவியுடன் அந்த இளைஞரை காட்பாடி காவல் நிலையத்தில் கருணாகரன் ஒப்படைத்து புகாா் அளித்தாா்.

அதன்பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபா் ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், கோமட்பல்லியைச் சோ்ந்த அசோக் (20) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 16,000 மதிப்புள்ள கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.