திருப்பரங்குன்றம் விவகாரம்: வேலூரில் மறியலில் ஈடுபட்ட 21 போ் கைது
உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து வேலூரில் சூடமேற்றி மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினா் 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரில் சாலையில் சூடமேற்றி மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினா்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து வேலூரில் சூடமேற்றி மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினா் 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காா்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், செவ்வாய்க்கிழமை மாலை திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையாா் கோயில் பகுதியில் மட்டுமே மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் இந்து முன்னணி அமைப்பினா் சாலையில் திடீரென சூடமேற்றி மறியலில் ஈடுபட்டனா்.
மேலும், அரசு மற்றும் காவல் துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டதாக இந்து முன்னணி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் மகேஷ் உள்பட 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

