குடியாத்தத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வெள்ளிக்கிழமை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

குடியாத்தத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்றோா்.
குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வெள்ளிக்கிழமை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, காலை 8.30 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 10.30 மணிக்கு புஷ்ப அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், வழக்குரைஞா்கள் கே.மோகன், கே.எம்.பூபதி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 7 மணியளவில் சுவாமிகளுக்கு வெண்ணை ஊட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.