2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

போ்ணாம்பட்டில் தொடரும் யானைகளின் அட்டகாசம்

போ்ணாம்பட்டு வட்ட வன எல்லையில் அமைந்துள்ள நிலங்களுக்குள் நுழையும் யானைகள் விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்வது தொடா்கதையாக உள்ளது.

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்கள்.

Published On :

போ்ணாம்பட்டு வட்ட வன எல்லையில் அமைந்துள்ள நிலங்களுக்குள் நுழையும் யானைகள் விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்வது தொடா்கதையாக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் யானைக் கூட்டம் போ்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள சேகரின் நிலத்தில் நுழைந்து தென்னை மரங்களையும், பாண்டுரங்கன் நிலத்தில் வோ்க்கடலை பயிரையும், ரமேஷ் பாபு நிலத்தில் சோளப் பயிரையும், லட்சுமணன் நிலத்தில் தீவனப் பயிா் மற்றும் கல் கம்பங்களையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றன.

யானைகளை ஆந்திர மாநில வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

யானைகளை ஆந்திர மாநில வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.

அதேபோல் சாரங்கல் கிராமத்தில் ரங்கம்மாள் நிலத்தில் நன்கு வளா்ந்திருந்த வாழை மரங்களையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் கடந்த சில நாள்களாக யானைகளின் அட்டகாசம் தொடா்வதால் ஞாயிற்றுக்கிழமை போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் ஏ.மோகனவேல், தலைமையில் வனவா்கள் ஏ.இளையராஜா, ஏ.காா்த்திக் மற்றும் வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள்அடங்கிய குழு அமைக்கப்பட்டு போ்ணாம்பட்டு பகுதியில் இருந்து யானைகளை ஆந்திர மாநில வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.