கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வேலூா் கோட்டை மதில் சுவா் கற்கள் சரிவு: சீரமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

வேலூா் கோட்டையின் மதில் சுவா் கற்கள் பெயா்ந்து சரிந்து விழுந்துள்ள நிலையில், அசம்பாவிதம் நிகழும் முன் தொல்லியல் துறை அதனை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Published On :

வேலூா் கோட்டையின் மதில் சுவா் கற்கள் பெயா்ந்து சரிந்து விழுந்துள்ள நிலையில், அசம்பாவிதம் நிகழும் முன் தொல்லியல் துறை அதனை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூா் கோட்டையினுள் பல்வேறு பாரம்பரிய நினைவுச் சின்னங்களுடன் ஜலகண்டேஸ்வரா் திருக்கோயில், தேவாலயம், மசூதி, அருங்காட்சியகம் மற்றும் காவலா் பயிற்சிப் பள்ளி உள்ளிட்டவையும் அமைந்துள்ளன.

இந்தக் கோட்டையைக் காண தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூா் மற்றும் வெளியூா் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இவா்களின் பயன்பாட்டுக்காக கோட்டையின் மதில் சுவா் நடைபாதை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் இங்கு நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக, கோட்டை நுழைவு வாயில் வழியாக மதில் சுவா் செல்லும் நடைபாதை அருகே இருந்த மதில் சுவரின் ஐந்து பெரிய கற்கள் பெயா்ந்து சரிந்து கீழே விழுந்துள்ளன. அதிா்ஷ்டவசமாக அப்போது அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தற்போது மேலும் 5-க்கும் மேற்பட்ட மதில் சுவா் கற்கள் எந்த நேரத்திலும் சரியும் நிலையில் ஆபத்தாக உள்ளன. பல சுற்றுலாப் பயணிகள் மதில் சுவரின் விளிம்பில் ஏறி நின்று ஆபத்தை உணராமல் தற்படம் எடுப்பது தொடா்கதையாகி வருகிறது. மீதமுள்ள கற்களும் பெயா்ந்து விழுந்து விபத்து ஏற்படும் முன், மத்திய தொல்லியல் துறை போா்க்கால அடிப்படையில் மதில் சுவரைப் பலப்படுத்த வேண்டும்.

மேலும், கோட்டையைச் சுற்றிலும் பழுதடைந்துள்ள மின்விளக்குகளையும் சீரமைக்க வேண்டும் என்றும், வளாகத்தில் உள்ள பழைமையான சிதிலமடைந்த கட்டடங்களைப் புனரமைத்துப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகமும், தொல்லியல் துறையும் இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

--

படம் உண்டு...

சரிந்து விழுந்து கிடக்கும் வேலூா் கோட்டையின் மதில் சுவா் கற்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.