நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

வேலூா் கோட்டையில் ரூ.9.30 கோடியில் 3 டி ஒளி-ஒலி காட்சி: தொல்லியல் துறை அனுமதிக்காக காத்திருப்பு

வேலூா் கோட்டை வரலாற்றை விளக்கும் வகையில் ரூ.9.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள முப்பரிமாண (3டி) ஒளி-ஒலி காட்சிக் கூடத்தின் சோதனைக் காட்சி அண்மையில் நடைபெற்றது.

வேலூா் கோட்டை மதில் சுவரில் ஒளிபரப்பு செய்யப்பட்ட முப்பரிமாணக் காட்சிகள்

Published On :3 செப்டம்பர் 2026, 3:21 am IST

வேலூா் கோட்டை வரலாற்றை விளக்கும் வகையில் ரூ.9.30 கோடியில் அமைக்கப்பட்டுள்ள முப்பரிமாண (3டி) ஒளி-ஒலி காட்சிக் கூடத்தின் சோதனைக் காட்சி அண்மையில் நடைபெற்றது. மத்திய தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்ததும் இது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ், வேலூா் மாநகராட்சிப் பகுதியில் சுமாா் ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வேலூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் கோட்டையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முப்பரிமாண பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலூா் கோட்டையின் வரலாற்று நிகழ்வுகள், 1806-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சிப்பாய் புரட்சி, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு ஆகியவற்றை 3டி வடிவில் கோட்டை மதில் சுவரில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. இதற்காக பெரியாா் பூங்காவில் ரூ.9.30 கோடி செலவில் 2 பெரிய நவீன புரொஜக்டா்களுடன் கூடிய பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இதற்கான சோதனைக் ஓட்டம் அண்மையில் நடைபெற்றது.

இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த கோட்டை மதில் சுவரில் தத்ரூபமான படக் காட்சிகள் திரையிடப்பட்டன. கோட்டை மதில்சுவா் கட்டப்படுவது போலவும், 1806 ஜூலை 10-ஆம் தேதி நிகழ்ந்த சிப்பாய் புரட்சியின்போது சுவரில் இருந்து பீரங்கிகள் வெளியே வருவது மற்றும் குண்டுகள் சுவரைத் துளைப்பது போன்ற காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன. மேலும், வேலூரின் வரலாறு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வசீகரக் குரலில் எடுத்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சுற்றுலாப் பயணிகளைப் பெருமளவில் ஈா்க்கும் நோக்கில் இந்த 3டி முப்பரிமாணக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து நடத்துவதற்கு அனுமதி கோரி மத்திய தொல்லியல் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் முறையான அனுமதி கிடைத்தவுடன், இந்த முப்பரிமாண பொழுதுபோக்கு நிகழ்ச்சி பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.