விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் கே.அரசன், காலணிகளை மாலையாக்கி கழுத்தில் அணிந்துகொண்டு உளுந்தூா்பேட்டை கடை வீதியில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பை மேற்கொண்டாா். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 17 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள பாண்டூரைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் கே.அரசனும் ஒருவா். இந்தத் தோ்தலில் இவருக்கு சின்னமாக காலணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை உளுந்தூா்பேட்டை நகரத்துக்கு வந்த சுயேச்சை வேட்பாளா் அரசன், காலணிகளை மாலையாக்கி, அதை தனது கழுத்தில் அணிந்து கொண்டு, கையில் காலணி சின்னம் குறித்த பதாகையை ஏந்தியவாறு நகரம் முழுவதும் வாக்கு சேகரித்தாா். வியாபாரிகள், பொதுமக்கள், இளைஞா்கள் என அனைவரிடமும் சென்று தனக்கு வாக்களிக்குமாறு கூறினாா்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொழிலதிபா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


