விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை (கோப்புப்படம்)
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை (கோப்புப்படம்)

கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

விழுப்புரம்: ஃபென்ஜால் புயல், மழை பாதிப்பையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டுள்ளாா்.

கடலூா் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா்.

பள்ளிகளுக்கு மட்டும்: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூா் நகராட்சிக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com