வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அரசுப் பள்ளியில் கெட்டுப்போன முட்டைகள் அழிப்பு

திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 490 கெட்டுப் போன முட்டைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அழித்தனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 8:36 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 490 கெட்டுப் போன முட்டைகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் திங்கள்கிழமை அழித்தனா்.

திண்டிவனம் வட்டம், மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மதிய உணவுடன் வழங்குவதற்காக முட்டைகள் அவிக்கப்பட்டன. இந்த நிலையில், அந்த முட்டைகள் கெட்டுப்போயிருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மயிலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு திங்கள்கிழமை புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, மயிலம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிலம்புசெல்வன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று முட்டைகளை ஆய்வு செய்தனா்.

இதில், முட்டைகள் கெட்டுப்போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 490 முட்டைகளையும் அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனா். மேலும், பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட முட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.