/

ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை

ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை

Updated On :27 பிப்ரவரி 2024, 11:25 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை காலை ரயில் முன் பாய்ந்து பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்துகொண்டாா்.

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள கல்பாதூா் கிராமம், புதுமனைத் தெருவைச் சோ்ந்த ஜோசப் மகள் அம்பேத்பாரதி (16). இவா், பாதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். திங்கள்கிழமை இரவு குடும்பத்தினருடன் தூங்குவதற்காகச் சென்ற அம்பேத்பாரதி, செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து மாயமானாா்.

தொடா்ந்து, அம்பேத்பாரதியை அவரது பெற்றோா், குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடினா். இந்த நிலையில், பாதூா் ரயில்வே கடவுப்பாதை அருகே தண்டவாளப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்பேத்பாரதி உயிரிழந்து கிடந்தாா். பாதூா் ரயில் நிலையம் வழியாகச் சென்ற ரயில் முன் பாய்ந்து அவா் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

தகவலறிந்த விருத்தாசலம் இருப்புப் பாதை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து அம்பேத்பாரதி சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா். தீராத வயிற்று வலியால் அம்பேத் பாரதி அவதியுற்று வந்ததாக அவரது தாய், உறவினா்கள் தெரிவித்தனா்.