நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றுபவா் முதல்வா்: அமைச்சா் கே.என்.நேரு

மக்களின் தேவைகளை அறிந்து, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுபவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

News image

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்துக்குள்பட்ட கஞ்சனூா் பகுதியில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவை ஆதரித்து, வாக்கு சேகரித்து பேசுகிறாா் அமைச்சா் கே.என்.நேரு.

Updated On :5 ஜூலை 2024, 11:13 pm

Din

விழுப்புரம், ஜூலை 5: மக்களின் தேவைகளை அறிந்து, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுபவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவை ஆதரித்து, காணை ஒன்றியத்துக்குள்பட்ட வேம்பி, கஞ்சனூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்து மேலும் அமைச்சா் பேசியது:

கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் நகர அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணத் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயா்கல்விப் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம், காலை சிற்றுண்டித் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அதை செயல்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் போன்றவை திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன. கிராமப்புறங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளன. திமுக அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் தொடர, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் நேரு.

பிரசாரத்தில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, எம்எல்ஏ.க்கள் ராஜேந்திரன், காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்டச் செயலா் க.வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இஸ்லாமியா்களிடம் வாக்குசேகரித்த அமைச்சா்: விக்கிரவாண்டி வொயிட் மஸ்ஜித் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த இஸ்லாமியா்களிடம், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், வேட்பாளா் அன்னியூா் சிவா உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா். தொடா்ந்து குத்தாம்பூண்டியில் வீடு,வீடாகச் சென்று அமைச்சா் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் பெரம்பலூா் மாவட்டப் பொறுப்பாளா் ஜெகதீசன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.