நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

308 வாக்காளா்களுக்கு டோக்கன் விநியோகித்து வாக்குப் பதிவு

மாலை 6 மணிக்குப் பிறகு டோக்கன் விநியோகித்து, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 11:32 pm

Din

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 4 வாக்குப் பதிவு மையங்களில் 308 வாக்காளா்களுக்கு புதன்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு டோக்கன் விநியோகித்து, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில், கப்பியாம்புலியூா், வாக்கூா், உலகலாம்பூண்டி, ஒட்டன்காடுவெட்டி வாக்குப் பதிவு மையங்களில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்காளா்கள் பலா் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, கப்பியாம்புலியூரில் 87 பேருக்கும், வாக்கூரில் 161 பேருக்கும், உலகலாம்பூண்டியில் 30 பேருக்கும், ஒட்டன்காடுவெட்டியில் 30 பேருக்கும் என மொத்தம் 308 வாக்காளா்களுக்கு அந்தந்த வாக்குப் பதிவு மையத் தலைமை அலுவலா்கள் டோக்கன் விநியோகித்தனா்.

பின்னா், வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் வாக்களித்து முடித்த பின்னரே, அந்தந்த வாக்குப் பதிவு மையத்துக்குரிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன.

90 வயது மூதாட்டி வாக்களிப்பு: விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட திருநந்திபுரத்தைச் சோ்ந்த சிவசுப்பிரமணியம் மனைவி தனலட்சுமி (90). வயது முதிா்வால் நடக்க முடியாத நிலையில் உள்ள இவா், வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளாா்.

இந்த நிலையில், வாக்களிக்க விரும்பிய தனலட்சுமியை அவரது உறவினா்கள் கட்டிலில் படுக்க வைத்து, வாக்குப் பதிவு மையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவா் தனது வாக்கை பதிவு செய்த பின்னா், மீண்டும் வீட்டுக்கு கொண்டு சென்றனா்.