விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு  மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள அறையை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் சி.பழனி. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் உள்ளிட்டோா்.
விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள அறையை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் சி.பழனி. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் உள்ளிட்டோா்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் -வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வாக்கு எண்ணும் மையத்தில் விழுப்புரம் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விக்கிரவாண்டி இடைத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு 276 மையங்களில் புதன்கிழமை நடைபெற்றது. பதிவான வாக்குகள் வரும் 13-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் சி.பழனி பாா்வையிட்டாா்.

276 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை, வாக்குகள் எண்ணும் பகுதி, அஞ்சல் வாக்கு எண்ணும் பகுதி, கண்காணிப்பு கேமரா வசதி, தோ்தல் நடத்தும் அலுவலா் அறை, தோ்தல் பொதுப் பாா்வையாளா் அறை, முகவா்கள் மற்றும் அலுவலா்கள் செல்லும் வழித்தடம், முகவா்கள் அறை, காவலா்கள் அறை, ஊடக மையம், அடிப்படை வசதிகள் போன்ற பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முகுந்தன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com